Monday, November 12, 2007

சண்டியர் நாட்டு போர் படை


சண்டியர் நாட்டு போர் படை

என் நெஞ்சில் ஊர்வலம் போகுதே.
அழி கடல்களின் பேரலை
என் மனதை சிலையாய் செதுக்குதே.

கனவில்ல இரவிது,

கனவை வாழ்ந்திடும் பொழுதிது.
கடலில் சூரியனை மூழ்கடித்து,
நிலவை வானிலே புதைத்துவிடு.

இதழை இதழால் முறையடி,

என் கேள்விக்கு கேள்வியால் விடையளி.
உயிரை மட்டும் விட்டுவிடு,
அதை உன் தோகை கொண்டு முத்தமிடு.

உன் விழியில் புறப்படும் தீபந்தம்

எனை உனக்குள்ளே வித்து உருக்குதே.
உன் உரைகள் எழுப்பிடும் பனிப்புயல்
உருகும் என்னை சிறையடைக்குதே.

உன் மனதின் ஆசைகள் கூறிவிடு,

அத்தனையும் நிறைவேற்ற ஆணையிடு.
அறிவின் அறையை மூடிவிட்டு,
இந்த இரவிற்கு மனதின் தோள் சேறு.

No comments:

Post a Comment