Saturday, November 8, 2014

முற்று முடிவிலி

மாருதம் தீண்டயில்
தேகம் உணர்ந்த ஞாபகம்
மேகலை தூரயில்
முத்தம் பதித்த ஞாபகம்
அந்திச்சூரியன் சிவக்கயில் 
நீ நாணம் கொண்ட ஞாபகம்
செங்கமலம் அரும்புகையில்
ஒற்றை புன்னகை ஞாபகம்

விம்பம் சுமக்கும் கடலின் ஆழம்
வெண்ணிலவு அறியுமோ?
நடுநிசியில் தோன்றும் முடிவிலி
அலைகள் தாண்ட இயலுமோ?

என் அருகில் நீயும் இல்லை
உன்னை சேரும் பாதை தென்படவில்லை
உன் நினைவுகள் என் நெஞ்சினிக்க
மருட்சியில் இவ்வேளை உறைக்க

இருளில் நான் கண்டறிந்தேன்
இரு பாதைகளின் கூடல்
போதும், இதில் நிறையும்
என் காலம் கொண்ட தேடல்

Saturday, October 11, 2014

தோழி


என் நெருங்கிய தோழியால் இரண்டு வருடங்களுக்கு முன், எனக்காக எழுதப்பட்ட ஓர் அழகிய கவிதை. அவள் எழுதியதை பொல, இப்பொழுது நாங்கள் திசை மாரி, கடல் கறந்து இருக்கிறோம். அவளின் நினைவுகளும், எங்கள் நட்பின் தூய்மையும் என் நெஞ்சின் ஓரம் சிறகுகள் கொண்டிருக்கின்றன.

முதல் நாள் ஓர் பார்வையில் அறிமுகம்
மறுநாள் இதழோர புன்னகையில் அது நிரந்தரம்.
அன்று நிலவின் நிழலில் நேரம் கழித்தோம், உணர்வுகள் பகிர்ந்தோம்.
இன்று நாலும் வளரும் நண்பர்கள் ஆனோம்!

தோள் கொடுப்பான் தோழனாம்,
அது இலக்கிய பிழை,
தோள் அல்ல, உயிரை கொடுப்பாள் உன் தோழி,
இதிலென்ன மறை?

பாதை எது வரை என்று தெரியாவில்லை
திசைகள் வேறுபடும், அதில் ஆச்சர்யம் இல்லை.
கடல் கடந்தாலும்,
கரை மறந்தாலும்,
என் நினைவுகள் உன்னுடன் என்றும் இருக்கட்டும்.
நம் நட்பும்,
அதன் தூய்மையும்,
சிறகுகள் விரித்து வானில் பறக்கட்டும்!

- சுவாதி

Friday, October 10, 2014

தமிழ் மதி


பூவிழி
அடி மை விழி
உன் நெற்றி பொட்டு ஈர்ப்பது
என் புவி

தேன்மொழி
இதழ் மழை துளி
உன் தயை கொண்டு பூத்ததால்
நான் கவி

எழிலினி
மின்னும் மூக்குத்தி
என் நாளை ஒளிர்க்கும்
விண் ஒளி

முகில்மதி
கூந்தல் கார் வீழ்ச்சி
தாழம்புவாய் பின்னிகொண்டேன்
ஏன் கனி?

குழலினி
பேசும் யாழடி
மடி சாய்ந்து உனை நான்
ரசிப்பேன் சகி

யைங்கிளி
பாதம் பொன் அல்லி
என் நெஞ்செல்லாம் விட்டு சென்றாய்
உன் சுவடி

மென்மதி
நடையில் முழுமதி
உன் கரம் கோர்த்து வருவேன்
முழு வழி



Wednesday, September 3, 2014

A Beautiful Today


It’s a beautiful today,
Wind in my hair as I trot.
Your memories rush to foray,
Reminding the best of you I’ve got.
It’s a beautiful today,
I wish with me you’d be.
With a smile lighting me up,
I live a moment within me.

It’s a beautiful today,
Wind playing my lullaby.
Memories don’t betray,
But the hope that comes by.

It’s a beautiful today,
I don’t need another one.
Nor memory, nor hope,
Nothing that ends before it began.

Friday, January 10, 2014

அணியிலக்கணம்


உன்னை என் விழியிலும் மேலாக
காக்க நினைத்தேன்,
என் மழலையை உன்னை
எண்ணி ரசித்தேன்.

அன்று உயிரை தொலைத்தேன்
உன்னிடம் நானோ,
இப்பொழுது நடைப் பிணமாய்
நான் வாழ்வது ஏனோ?

நேற்று உயிரை துயர
துணிச்சல் திரட்டினேன்,
ஆனால் உன்னை தனியே விட்டு
செல்ல அச்சம் கொண்டேன்.

என் வானில் நட்சத்திரங்கள் உண்டு,
நிலா இல்லை
நான் விடும் மூச்சில் காதற்று உண்டு,
உயிரூற்றிய சுவாசம் இல்லை!