என் நெருங்கிய தோழியால் இரண்டு வருடங்களுக்கு முன், எனக்காக எழுதப்பட்ட ஓர் அழகிய கவிதை. அவள் எழுதியதை பொல, இப்பொழுது நாங்கள் திசை மாரி, கடல் கறந்து இருக்கிறோம். அவளின் நினைவுகளும், எங்கள் நட்பின் தூய்மையும் என் நெஞ்சின் ஓரம் சிறகுகள் கொண்டிருக்கின்றன.
முதல் நாள் ஓர் பார்வையில் அறிமுகம்
மறுநாள் இதழோர புன்னகையில் அது நிரந்தரம்.
அன்று நிலவின் நிழலில் நேரம் கழித்தோம், உணர்வுகள் பகிர்ந்தோம்.
இன்று நாலும் வளரும் நண்பர்கள் ஆனோம்!
தோள் கொடுப்பான் தோழனாம்,
அது இலக்கிய பிழை,
தோள் அல்ல, உயிரை கொடுப்பாள் உன் தோழி,
இதிலென்ன மறை?
பாதை எது வரை என்று தெரியாவில்லை
திசைகள் வேறுபடும், அதில் ஆச்சர்யம் இல்லை.
கடல் கடந்தாலும்,
கரை மறந்தாலும்,
என் நினைவுகள் உன்னுடன் என்றும் இருக்கட்டும்.
நம் நட்பும்,
அதன் தூய்மையும்,
சிறகுகள் விரித்து வானில் பறக்கட்டும்!
- சுவாதி
No comments:
Post a Comment