பூவிழி
அடி மை
விழி
உன் நெற்றி
பொட்டு ஈர்ப்பது
என் புவி
தேன்மொழி
இதழ் மழை
துளி
உன் தயை
கொண்டு பூத்ததால்
நான் கவி
எழிலினி
மின்னும் மூக்குத்தி
என் நாளை
ஒளிர்க்கும்
விண் ஒளி
முகில்மதி
கூந்தல் கார்
வீழ்ச்சி
தாழம்புவாய் பின்னிகொண்டேன்
ஏன் கனி?
குழலினி
பேசும் யாழடி
மடி சாய்ந்து
உனை நான்
ரசிப்பேன் சகி
யைங்கிளி
பாதம் பொன்
அல்லி
என் நெஞ்செல்லாம்
விட்டு சென்றாய்
உன் சுவடி
மென்மதி
நடையில் முழுமதி
உன் கரம்
கோர்த்து வருவேன்
முழு வழி
No comments:
Post a Comment